வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் வீடு

வறுமை காரணமாக சிறு குடிசையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த யாழ். வண்ணார்பண்னையைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் தாமாக முன்வந்து வீடொன்றை அமைத்து வழங்கியுள்ளனர். கணவர், மனைவி, இரண்டு பிள்ளைகள் கொண்ட மேற்படி குடும்பம் மாதாந்த வருமானம் போதியளவு இன்றிய நிலையில் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னர் தமக்குச் சொந்தமான சிறிய நிலப் பரப்பில் சிறு குடிசை அமைத்து இந்தக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். […]

Continue Reading

கொடிகாமம் சந்தையில் கழிவு வீதம் அறவிடுவதற்கு தடை!

சந்­தை­களில் அற­வி­டப்­படும் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது கழிவு நட­வ­டிக்­கை­க­ளினால்  அதி­க­ள­வி­லான நட்­டத்தை அடை­கின்­றனர். இந்­நி­லையில் 10% கழிவை வழங்­கு­மாறு விவ­சா­யி­களை கட்டா­யப்­ப­டுத்­தக்­கூ­டாது என சாவ­கச்­சேரி பிர­தேச சபை செய­லாளர் அ. வினோராஜ் அறிவித்­துள்ளார். கொடி­காமம் சந்­தையில் விற்பனைக்கு கொண்­டு­வரும் உற்­பத்திப் பொருட்­க­ளுக்கு சந்தை வியா­பா­ரி­களால் 10% கழிவு அற­வி­டப்­ப­டு­வ­தனை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பான கலந்துரை­யாடல் பிர­தேச சபை மண்­ட­பத்தில் அண்­மையில் இடம்­பெற்ற­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். சந்­தை­களில் விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து பொருட்­களை கொள்­வ­னவு செய்­யும்­போது 10% இற்கு ஒன்று […]

Continue Reading